இலங்கையில் பொலிஸாருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில் பொலிஸாருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!

நாட்டிலுள்ள பொலிஸாருக்கு இன்று (13-02-2024) முதல் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக அடுத்த 6 மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த கட்டத்தில் நிலுவைத் தொகையுடன் கூடிய அதிகரித்த கொடுப்பனவையும் பொலிஸாருக்கு வழங்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொலிஸாருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு! | Happy Announcement For The Police In Sri Lanka

மேலும், பொலிஸாருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு 18,930 ரூபாய் முதல் 25,140 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.