‘செழிப்பான பார்வை’ கொள்கைப் பிரகடனத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்- ஜனாதிபதி
‘நாட்டை கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கா பாராளுமன்ற அதிகாரத்தையும் வேலைத்திட்டத்திற்கான ஒத்துழைப்பையும் தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் குருநாகல் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நேற்றைய தினம் (26) நிகவெரடிய சந்தைக்கு அருகே குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட மகா சங்க உறுப்பினர்கள் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை பாராட்டியதோடு, அவருக்கு ஆசி வழங்கியதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.