கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

கூகுள் நிறுவனத்தின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான Bard ஜெமினி' எனப் பெயர் மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு (Chat GPT) போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களைத் தொடர்ந்து வருவதாக கூகுள் தெரிவிக்கிறது.

பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஜெமினி செயலி உருவாக்கும் டைலன் ரௌசெல்லிடம் இருந்து கிடைத்த தகவல்படி அநேக பெயர் மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.     

இதேவேளை, ஜெமினியில் குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய அம்சங்களையும், ஜெமினை அட்வான்ஸ்டு அல்ட்ரா 1.0 (Gemini advanced - ultra 1.0) என்ற புதிய ஜெமினி வடிவத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு! இனி அந்த பெயர் இல்லை | Google Bard Name Changed Gemini