வழமைக்கு மாறாக தமிழ் மொழியில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் ; 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

வழமைக்கு மாறாக தமிழ் மொழியில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் ; 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் தமிழ்மொழியில் இசைக்கப்பட்டது.

வழமைக்கு மாறாக தமிழ் மொழியில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் ; 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு | 76Th National Independence Day Played In Tamil

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் 'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார்.

தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை மற்றும் இசைக்கப்படாமை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறான விமர்சனங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.