சீனப்படைகள் எல்லையில் முழுவதுமாக படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் – இந்தியா

சீனப்படைகள் எல்லையில் முழுவதுமாக படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் – இந்தியா

இரு நாடுகளுக்கும் இடையேயான சுமூக உறவு  மற்றும் ஆரோக்கியமான சூழல் உருவாவதற்கு சீனப்படைகள் எல்லையில் முழுவதுமாக படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பான 17 ஆவது ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் கூட்டத்தில் இது குறித்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதி, ரோந்து பகுதி 15 மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா பகுதிகளில் இந்திய மற்றும் சீனப் படைகள் மீளப் பெறப்பட்டன.

குறித்த இடங்களில் இரு நாட்டு படைகள் மீளப்பெறப்பட்டாலும் பாங்கோங் சோ லேக் பகுதியில் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கிழக்கு லடாக்கின் எல்லைப் கோட்டு பகுதியில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சீனவீரர்கள் தற்போதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இதனையடுத்தே இந்தியா தரப்பில் மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.