களனியில் குளிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி!

களனியில் குளிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி!

கொழும்பு - கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தைப் பகுதி களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் துணி துவைக்கவும் குளிப்பதற்கும் குறித்த இடத்துக்கு சென்றுள்ளான்.

இந்நிலையில், பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென முதலை ஒன்று தாக்கி விட்டு சிறுவனைக் கெளவிச் சென்றுள்ளது.

களனியில் குளிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி! | Nine Year Old Boy Who Went To Bathe In Kelaniகடுவெல வெலிவிட்ட, புனித அந்தோனி மாவத்தையில் வசிக்கும் டிஸ்னா பெரேரா என்ற 9 வயது சிறுவனே இந்தச் சம்பவத்துக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருந்ததனை தாம் கண்டதாக தெரிவித்தனர்.

சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

களனியில் குளிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி! | Nine Year Old Boy Who Went To Bathe In Kelani