அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளுக்கு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளுக்கு

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு 12.03.2025 வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபாய் வௌியிடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பயனாளிகள் நாளை முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்கிலிருந்து உதவித்தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.