யாழில் மனநோயாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

யாழில் மனநோயாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை தரப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், தெல்லிப்பளை பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மனநோயாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது | Jaffna For Sexually Assaulting Mentally Ill Woman

குறித்த வைத்தியசாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.