
போர்த்துக்கலில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்படுத்தல் விதியை தொடர இங்கிலாந்து முடிவு!
போர்த்துக்கலில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்படுத்தல் விதியை தொடருவதற்கு இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
புதுபிப்பு பட்டியலில், எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.
ஆனால், இங்கிலாந்தின் முடிவு குறித்து போர்த்துக்கல் அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து எடுத்த முடிவு உண்மைகளால் ஆதரிக்கப்படவில்லை என்று போர்த்துக்கலின் வெளியுறவு அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க போர்த்துக்கல் சமீபத்தில் அதன் தலைநகர் லிஸ்பனின் புறநகரில் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளை விதித்தது.
போர்த்துக்கலில் இதுவரை 49,632 கொரோனா வைரஸ் தொற்றுகளும் 1,712 இறப்புகளும் பதிவாகியுள்ளன.