கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி!

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி!

கம்பஹா பகுதியில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி! | Robbery Incident In Gampaha Cctv Photos Released

இச்சம்பவம் உடுகம்பொல பிரதேசத்தில் இன்றைய தினம் (11-12-2023) காலை 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை அடகு வைக்கும் நிலையத்தை திறக்கும் போது உள்ளே நுழைந்த இருவரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி! | Robbery Incident In Gampaha Cctv Photos Releasedசுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளதாக அடகுக் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

கம்பஹாவில் பெரும் கொள்ளை சம்பவம்: சிசிரிவில் சிக்கிய பரபரப்பு காட்சி! | Robbery Incident In Gampaha Cctv Photos Released