ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றவரால் கொரோனா பரவுமா? பொலிஸார் விளக்கம்
அங்கொட - ஐ.டி.எச்சிலிருந்து தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யபட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளியால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தப்பிச்செல்வதற்கு பயன்படுத்திய வழிகள் போக்குவரத்து சாதனங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் நோயாளி தப்பிச்சென்றுள்ளார் என தகவல் கிடைத்து சில மணிநேரங்களில் அதிகாரிகள் அவரை கைது செய்துவிட்டனர்.
மருத்துவமனையின் பணியாளர்களின் கண்ணில் மண்ணை தூவிட்டு இன்று அதிகாலை இரண்டு மணிக்கு மருத்துவமனையின் மதிலால் குதித்து அந்த நபர் தப்பிச்சென்றுள்ளார் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் மருத்துவமனையின் இரு பணியாளர்கள் உடனடியாக அவரை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற குறித்த நபர் கோட்டை, பிரதான வீதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலமே கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதிக்குச் சென்றுள்ளார். அவரை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.