விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கும் வாய்ப்பு.

விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கும் வாய்ப்பு.

லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் இலங்கையர்கள் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 2.00 மணிக்குப் பிறகு, கிழக்கு அடிவானத்தில் இந்த விண்கல் மழை தென்பட வாய்ப்புள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு 10-15 விண்கற்கள் வரை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கும் வாய்ப்பு | Leonid Meteors To Rain In Sri Lankan Skies