இன்றைய தினத்துக்கான வளிமண்டளவியல் அறிக்கை!

இன்றைய தினத்துக்கான வளிமண்டளவியல் அறிக்கை!

இன்றைய தினம் (07.11.2023) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய தினத்துக்கான வளிமண்டளவியல் அறிக்கை! | Today Weather Condition In Sri Lanka

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.