நயன்தாரா சமந்தாவிற்கு என்ன பரிசு அனுப்பினார் தெரியுமா... நெகிழ்சியில் சமந்தா.
திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், வசூலில் 1000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிப்பு தவிர ஏனைய பல துறைகளிலும் புத்துணர்ச்சியுடன் செயற்படும் நயன்தாரா சமீபத்தில் அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
நயன்தாராவின் கம்பனியில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன பொருட்கள் தற்போது மலேசியா சிங்கப்பூர் என பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இந்நிலையில் நயன்தாரா தனது நெருங்கிய தோழியான நடிகை சமசந்தாவிற்கு தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன பொருட்களை பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பொருட்களை பாவிக்க ஆவலாக இருப்பதாக பதிவொன்றை செய்துள்ளார்.சமந்தாவின் இந்த நெகிழ்கியாக பதிவு தற்போது இணையதயத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.