மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை!

மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை!

 இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (03) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கெரட்" தங்கத்தின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது. இது, கடந்த வாரம் செவ்வாய்கிழமை 156,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.

மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை! | Price Of Gold People Of Sri Lanka Happyஇதனிடையே கடந்த செவ்வாய்கிழமை 169,500 ரூபாவாக காணப்பட்ட "24 கெரட்" தங்க பவுன் விலை இன்றைய தினம் 165,500 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.