யாழில் மதத்தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய கூட்டமைப்பு வேட்பாளர்கள்

யாழில் மதத்தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய கூட்டமைப்பு வேட்பாளர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் யாழ்ப்பணத்திலுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ மதகுருக்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்துள்ளனர்.

இச் சந்திப்பின் போது மதத்தலைவர்களுடன், கூட்டமைப்பினர் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தேர்கல் கள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியதுடன் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ஒன்றினையும் வழங்கி வைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்டவர்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.