இலங்கையில் பெண் ஒருவரின் சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசாங்கம்..!

இலங்கையில் பெண் ஒருவரின் சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசாங்கம்..!

கண்டியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணின் சொத்துக்களை முடக்க கண்டி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, குண்டசாலை, மஹவத்தை பிரதேசத்தில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவரின் சொத்துக்கள் நேற்று முடக்கப்பட்டுள்ளது.

குறித்த சொத்துக்களின் பொறுப்பு குண்டசாலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கையில் பெண் ஒருவரின் சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசாங்கம் | A Womans Property Is Completely Frozen