கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண் போராளிகளின் உடல் எச்சங்கள் மீட்பு..!

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண் போராளிகளின் உடல் எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய தினம்(8) விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனித உடல எச்சங்களுக்கு நடுவில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதுடன், மீட்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண் போராளிகளின் உடல் எச்சங்கள் மீட்பு(படங்கள்) | Kokkuthoduvai Human Burial Ground 3Rd Day

யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் இணைந்து கொண்டிருந்தார்.

அத்துடன் மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது, இனங்காணப்பட்ட 2 மனித உடல எச்சங்கள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பொதி செய்ப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட உடல எச்சங்களானது பெண்களுடையது என அடையாளப்படுத்தப்படும் வகையில் ஆடைகளும் மீட்கப்பட்டிருந்தன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண் போராளிகளின் உடல் எச்சங்கள் மீட்பு(படங்கள்) | Kokkuthoduvai Human Burial Ground 3Rd Day

அத்துடன் மீட்கப்பட்ட ஆடைகளில் கைகளினால் தைக்கப்பட்ட இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery