பேருந்து மோதியதில் 17 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

பேருந்து மோதியதில் 17 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

தம்புள்ள-குருநாகல் பிரதான வீதியின் நீதிமன்ற சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் பேரூந்தில் இருந்து கீழே இறங்க முயற்சித்த போது பேரூந்துடன் மோதுண்டு பலியானதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 17 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.