முல்லைத்தீவில் குடும்பஸ்தர் உட்பட நால்வர் கைது!!

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் உட்பட நால்வர் கைது!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கள்ளப்பாடு பகுதியில் குடும்பஸ்தர் உட்பட நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் போதை பாவனையில் ஈடுபட்டதுடன் அதற்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தியநிலையில் அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.