குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்.

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்.

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், எனவே குழந்தைகளை வைத்தியசாலைக்கு அழைத்துவர பெற்றோர் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Fever Effect In Sri Lanka Important Announcementகடந்த வாரம் சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததை முன்னிலைப்படுத்தி சிலர் வைத்தியசாலை தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

குழந்தையின் சத்திரசிகிச்சை தொடர்பான அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. கிருமிகள் உட்சென்றதால் குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Fever Effect In Sri Lanka Important Announcement

இருப்பினும், வைத்தியசாலையில் தினமும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன,

மேலும் குழந்தைகளுக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள், CT பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தைகளுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் வைத்தியசாலைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.