டுவீட்களுக்கு புதிய பெயர் வழங்கிய எலான் மஸ்க்.
டுவிட்டா் பதிவுகள் அனைத்தும் ‘டுவீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் அவை இனி ‘எக்ஸ்’கள் என்று அழைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் டுவிட்டரின் நீல நிறக் குருவி இலச்சினையை சமீபத்தில் மாற்றப்பட்ட நிலையில் தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே, அதில் பல அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.
அந்த மாற்றங்கள் வணிக ரீதியாக கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் இலச்சினையை மாற்றி கருப்பு - வெள்ளை நிறத்தில் எக்ஸ் இலச்சினையை அறிமுகம் செய்தார்.
எனினும் ஏற்கெனவே உள்ள எக்ஸ் இலச்சினையை சற்று அடர்த்தியாக்கி இறுதி வடிவம் கொடுத்துள்ளார்.