உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?: இதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் ஜிமெயில் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?: இதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

உலகத்தில் அனைவருமே கூகுள் கணக்குகளை பயன்படுத்துகிறார்கள். இதில் பல முக்கியமான தகவல்களை சேமித்தும் வைத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் வெவ்வெறு டிவைஸ்களில் ஜிமெயில் அக்கவுண்ட்களை லொகின் செய்து லொக் அவுட் செய்ய மறந்து விடுகிறோம்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் நமது அக்கவுண்டை வேறு யாரேனும் பயன்படுத்தலாம். அதன் மூலம் நமது டேட்டாக்கள் திருடப்படலாம்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்கள் எந்தெந்த டிவைஸ்களில் லொக் இன் செய்யப்பட்டது என்பதை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்.

முதல் வழி

முதலில் உங்கள் ஜிமெயிலை ஓபன் செய்து, வலது பக்க மூலையில் உள்ள புகைப்படத்தை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து, மெனேஜ் யுவர் ஜிமெயில் அக்கவுண்டை க்ளிக் செய்யவும்.

அடுத்து புதிய பக்கமொன்றில் செக்யூரிட்டி என்பதை க்ளிக் செய்யவும்.

அதில் நீங்கள் எந்தெந்த டிவைஸ்களில் ஜிமெயில் லொக் இன் செய்துள்ளீர்கள் என்ற லிஸ்ட் வரும். அதனை நீங்கள் லொக் அவுட் செய்துவிடலாம்.

இன்னொரு வழி

ஜிமெயிலை லொக் இன் செய்யவும். ஸ்க்ரீனின் கீழ் பக்கமாக ஸ்க்ரோல் செய்யவும்.

லாஸ்ட் அக்கவுண்ட் எக்டிவிட்டி என்பதை க்ளிக் செய்யவும்.

அதில் டீடைல்ஸ் என்ற ஒப்ஷன் இருக்கும். அதனைக் க்ளிக் செய்தால் முழு லிஸ்ட் வந்துவிடும். நீங்கள் அனைத்தையும் லொக் அவுட் செய்துவிடலாம்.