தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுமா? அச்சத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் மோடிக்கு கடிதம்

தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுமா? அச்சத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் மோடிக்கு கடிதம்

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக பொது முடக்கம் தற்போது அமுலில் உள்ளதால் மத்திய அரசு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

சங்கத் தலைவர் கணேசன் இன்று (புதன்கிழமை) பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பொதுமுடக்கம் காரணமாக பட்டாசு வியாபாரிகள் தற்போது பட்டாசுகளைக் கொள்வனவு செய்வதற்காக முற்பதிவுகள் எதனையும் கொடுப்பதில்லை.

ஏற்கெனவே, கொடுத்த முற்பதிவுகளையும் ரத்து செய்து வருகிறார்கள். இதனால் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. காசு இல்லாததால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை மதம், இனம், மொழி கடந்து இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனவே மத்திய அரசு எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும் நமது கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் பட்டாசு உள்ளிட்ட பல தொழில்கள் வளர்ச்சி அடைய மத்திய அரசின் சிறப்பான அறிவிப்பினை பொது மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.