போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் உட்பட இருவர் கைது - மன்னாரில் சம்பவம்..!

போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் உட்பட இருவர் கைது - மன்னாரில் சம்பவம்..!

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 16 வயது சிறுவன்  கைது  செய்யப்பட்டதைத் தொடர்ந்து 21 வயதான மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் உட்பட இருவர் கைது - மன்னாரில் சம்பவம் | Fake Currency Notes Two Arrested Including A Boy

குறித்த நபர்களிடமிருந்து 33 போலி நாணயத்தாள்களை கைபற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 21 வயதான நபர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், 16 வயதான சிறுவனை தெல்லிபழை சிறுவர் நன்னடத்தை மையத்தில் ஒப்படைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.