ஸ்ரீலங்காவுக்கு பூனையால் வந்த பேராபத்து?

ஸ்ரீலங்காவுக்கு பூனையால் வந்த பேராபத்து?

இந்திய உயரஸ்தானிகர் குழுவுடன் ஸ்ரீலங்கா வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கா வந்துள்ளனர்.

இவர்களுடன் வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

அதனை ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வர பேராதனை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இந்த பூனையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்த பரிசோதனை நடத்தப்படவில்லை என தெரியவருகிறது.

விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இது ஆபத்தான நிலைமை என விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.