மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்றைய தினம் (07.06.2023) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கார் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், கார் ஒன்றும் நேருக்கு நேராக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.