கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தங்கம் - பெருந்தொகை அபராதம் விதிப்பு..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தங்கம் - பெருந்தொகை அபராதம் விதிப்பு..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்திற்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகள் நேற்று முன்தினம் கைப்பற்றிய சட்டவிரோத தங்க கையிருப்புக்கே மிகப்பெரி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த அபராத தொகை ஒரு கோடியே 7 லட்சத்து 27ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்திற்கு சமமான அளவு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலிடத்தின் உத்தரவின் பேரில் தங்கம் கொண்டு வந்த நபரிடம் இருந்து இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கொண்டு வந்த 8 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்காக 75 லட்சம் ரூபாய் தண்டப்பணமே அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.