மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

  நாட்டில் தற்போது நத்தார் விழா ஆரம்பித்துள்ள நிலையில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது.

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு | Fish Prices Increase Sharply Srilanka

பாரை மீன் கிலோ 1,800 ரூபாயாகவும், சாலை 560 ரூபாயாகவும், மத்தி 1020 ரூபாயாகவும், லின்னா 980 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தையின் மொத்த விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மீனின் மொத்த விலை கெலவல்ல 1,500 ரூபாவாகவும், தலபாட் 1,900 ரூபாவாகவும், பலயா 800 ரூபாவாகவும் உள்ளது.