பாலத்திற்கு அடியில் மீட்கப்பட்ட 22 வயது யுவதியின் சடலம் - மட்டக்களப்பில் சம்பவம்!

பாலத்திற்கு அடியில் மீட்கப்பட்ட 22 வயது யுவதியின் சடலம் - மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பாலத்திற்கு அடியில் மீட்கப்பட்ட 22 வயது யுவதியின் சடலம் - மட்டக்களப்பில் சம்பவம் (படங்கள்) | Murder Police Investigating Srilanka

மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.