அதிகரிக்கும் சிறுவர் மீதான வன்புணர்வு -வெளியான அதிர்ச்சி தகவல்…!

அதிகரிக்கும் சிறுவர் மீதான வன்புணர்வு -வெளியான அதிர்ச்சி தகவல்…!

 சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம், சிறுபாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடத்தின் (2023) முதல் நான்கு மாதங்களில் 3102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜிவனி அபேகோன் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு (2022) மட்டும் 10,497 சிறுவர் மீதான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோக அறிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கற்பிக்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் சிறுவர்களின் உடல் ரீதியான துஷ்பிரயோகம் தொடர்பானவை என்று அவர் கூறினார். அந்த எண்ணிக்கை 2096.

இது தவிர, சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாதது குறித்து 1231 முறைப்பாடுகள் ,சிறுவர் புறக்கணிப்பு குறித்து 2005 முறைப்பாடுகள் , கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் குறித்து 185 முறைப்பாடுகள் , சிறுவர் பிச்சை எடுப்பது குறித்து 249 முறைப்பாடுகள் , பலாத்காரம் குறித்து 167 முறைப்பாடுகள் , 729 சிறுவர்கள் சிறுபாலியல் துன்புறுத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 25 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

அதிகரிக்கும் சிறுவர் மீதான வன்புணர்வு -வெளியான அதிர்ச்சி தகவல் | Violence Against Children On The Rise

அதிகாரசபைக்கு அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 1708 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 1027 முறைப்பாடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 791 முறைப்பாடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 652 முறைப்பாடுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 597 முறைப்பாடுகளும், காலி மாவட்டத்தில் 703 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்கொடுமை தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகள் நவம்பர் 2022 இல் பதிவாகியுள்ளன என்றும் அந்த எண்ணிக்கை 1105 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒவ்வொரு மாதமும் 600க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 2022 ஆம் ஆண்டில், ஜூன் மாதத்தில் மிகக் குறைவான முறைப்பாடுகள் வந்ததாகவும், எண்ணிக்கை 600 ஆகவும் இருந்தது என்று அவர் தெரிவித்தார்.. 2023 ஜனவரியில் 779 புகார்களும், பெப்ரவரியில் 703 புகார்களும், மார்ச்சில் 1026 புகார்களும், ஏப்ரலில் 594 புகார்களும் கிடைத்துள்ளன.