அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று முதல் நடைமுறையாகும் செயற்திட்டம்!

அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று முதல் நடைமுறையாகும் செயற்திட்டம்!

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று முதல் 2 மணித்தியாலங்களை டெங்கு ஒழிப்புக்காக ஒதுக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், அனைத்து அரச நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைகள் தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.

இதனடிப்படையில், அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், 

விரைவில் இது தொடர்பிலான சுற்றறிக்கை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

அதேசமயம், நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை அனைத்து பகுதிகளிலும் உரியவகையில் முன்னெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று முதல் நடைமுறையாகும் செயற்திட்டம்! | New Announcement To Srilanka Government Employees

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் 18,420 டெங்கு நோயாளர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தில் 8371 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அதேசமயம், நாடு பூராகவும் 61 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவு தொடர்ந்தும் டெங்கு அதி அபாய வலயங்களாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.