சம்பந்தன் - சஜித் சந்திப்பு: அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பேச்சு.!

சம்பந்தன் - சஜித் சந்திப்பு: அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பேச்சு.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்றைய தினம் (26.05.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகக் கூறப்படுகின்றது.

மேலும், நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜனநாயகத்திற்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.