பொசன் பண்டிகைக்கு 31 இலட்சம் ஒதுக்கீடு..!

பொசன் பண்டிகைக்கு 31 இலட்சம் ஒதுக்கீடு..!

பொசன் பண்டிகைக்கு ஒதுக்கப்பட்ட பணம் போதாது என்பதால், தட்சணை பெற்று மீதித் தொகையை சேகரித்து தருவதாக வலவஹங்குனவேவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொசன் பண்டிகைக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாமை குறித்து மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் தலைவர் வலஹங்குனவேவே தம்மரதன நாயக்க தேரர் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

வடமத்திய மாகாணத்தின் பதில் ஆளுநர் லலித் யு.கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரை அவர் பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்த வருட பொசன் பண்டிகையின் போது மிஹிந்தலை விகாரைக்கு மட்டும் புத்தசாசன அமைச்சினால் 31 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.