முட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை!

முட்டை இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை!

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது.

சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.

இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள பல கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டிக்கு திரும்ப உள்ளனர்.

தற்போது, ​​இந்தியாவில் 03 கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதுடன், போதிய அளவு இல்லாததால், சில புதிய பண்ணைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

அதன்படி நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.