காணித்தகராறு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டு கொலை..!
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணித் தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கு இடையிலான காணித் தகராறு காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதுடன், 4 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.