12 நண்பர்களை சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்த பெண்...!

12 நண்பர்களை சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்த பெண்...!

12 நண்பர்களை சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்த பெண் ஒருவரை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சராரத் ரங்சிவுதாபாா்ன் என்ற குறித்த பெண்ணையே காவல்துறையினர் கைது செய்துள்ளனா்.

கொலை செய்யப்பட்ட 12 பேரில் சராரத் ரங்சிவுதாபாா்னின் காதலரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணுடன் ஒன்றாக வெளியிடம் சென்ற அவரது நண்பி திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் சந்தேகம் கொண்டு, காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் பின்னர், உயிரிழந்த நண்பி உட்பட மொத்தமாக 12 பேரை சயனைட் விசம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட 12 பேரில் அவரது காதலனும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.