மலையக மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதா அநுர அரசாங்கம்? நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் கடும் விமர்சனம்!

மலையக மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதா அநுர அரசாங்கம்? நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் கடும் விமர்சனம்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், மலையக மக்களுக்காக அரசாங்கம் பெயரளவிலான திட்டங்களை மட்டுமே முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்டப்புற மக்களுக்கான வீட்டுத்திட்டம் தோட்டங்களில் பணிபுரிபவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்கால சந்ததியினரின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி எந்தவொரு உறுதியான அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிப்பதாகவும், பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தக் காலத்தை நீடிக்கும் தீர்மானம் தவறானது என்றும் ஜீவன் தொண்டமான் விமர்சித்துள்ளார்.