தொடரூந்தில் பயணிகள் மீது தீ வைப்பு - தண்டவாளத்தில் குழந்தை உட்பட மூவர் சடலங்களாக மீட்பு

தொடரூந்தில் பயணிகள் மீது தீ வைப்பு - தண்டவாளத்தில் குழந்தை உட்பட மூவர் சடலங்களாக மீட்பு

இந்தியாவின் கேரள மாநிலம் எழத்தூர் பகுதியில் விரைவு தொடரூந்தில் வைத்து பயணிகள் மீது இனந்தெரியாத ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனை கண்டு அச்சமடைந்த நிலையில் ஓடும் தொடரூந்தில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் மூவரின் சடலங்களும் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன. இந்தநிலையில் தீயினால் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஒடும் தொடரூந்தில் தீ வைத்தவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.