பால் தேநீரின் விலை குறைப்பு

பால் தேநீரின் விலை குறைப்பு

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை நாளை (27) முதல் 90 ரூபாவாக குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பால் மாவின் விலை குறைவடைந்துள்ளதை பயன்படுத்தி மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, 100 ரூபாவாக இருந்த பால் தேநீரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாலும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அண்மையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.