8 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைது

8 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைது

அதிக இயந்திர திறன் கொண்ட 08 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல்மாகாண புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட கல்கிஸ்ஸை பிரிவின் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்தனபிட்டிய பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு போலியானவை என சந்தேகிக்கப்படும் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (25) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.