இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் உயர்வு

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 329 ரூபா 02 சதமாகவும், விற்பனை பெறுமதி 346 ரூபா 33 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை (10) முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது.

நேற்று (15) அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 59 சதமாகவும், விற்பனை பெறுமதி 344 ரூபா 66 சதமாகவும் பதிவாகியிருந்தது.


No description available.