உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம் முடங்கியது

உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம் முடங்கியது

உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழந்துள்ளதாக, செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com ஐ மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, 46,000 க்கும் மேற்பட்ட பயனர்கள், இன்ஸ்டாகிராம் புகைப்பட-பகிர்வு தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக முறைப்பாடளித்துள்ளனர்

இங்கிலாந்தில் சுமார் 2,000 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து தலா 1,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் டவுன்டெடெக்டர் தெரிவித்துள்ளது.

எவ்வாராயினும், இந்த செயலிழப்புக்கான காரணம் குறித்து மெட்டா meta  உடனடியாக எந்த பதிலையும் வழங்கியிருக்கவில்லை.

 

No description available.