சென்னையில் பரவும் புதிய காய்ச்சலுக்கு இதுதான் காரணம்… ICMR விளக்கம்!

சென்னையில் பரவும் புதிய காய்ச்சலுக்கு இதுதான் காரணம்… ICMR விளக்கம்!

சென்னையில் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொற்றுக்கான காரணம் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவிலுள்ள பல நகரங்களில் தற்போது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஐசிஎம்ஆர் இது இன்ப்ளுயன்ஸா வகை A H3N2 எனக் கண்டறிந்துள்ளனர். பருவக்காலங்களில் ஏற்படும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த ஒருவாரம் வரையிலும் அதன் பாதிப்பு இருக்கும் எனவும் இந்த மாத இறுதிக்குள் இந்த வகை வைரஸ்களின் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக பருவக் காலங்களில் ஏற்படும் இன்ப்ளுயன்ஸா வைரஸ் பாதிப்பினால் சளி, இருமல், கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் மூலமாக இந்த வைரஸ் தொற்று மற்றவர்களுக்கும் எளிதாகத் தொற்றிக் கொண்டு விடுகிறது. எனவே இதுபோன்ற நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் மற்றும் பொது இடங்களில் இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.