கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி பாடசாலைகளுக்கு பூட்டு

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி பாடசாலைகளுக்கு பூட்டு

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விமான பயணங்களும் தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பல வாகன விபத்துகளும் பதிவாகியுள்ளதுடன், தொடரூந்து சேவைகளும் தாமதமாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் பல பகுதிகளில் நாளை வரை கடும் பனிமூட்டம் நீடிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.