நீங்க ஆன்லைனில் டேட்டிங் பண்ணுறீங்களா? அப்ப அவங்கள நீங்க எப்ப மீட் பண்ணனும் தெரியுமா ?

நீங்க ஆன்லைனில் டேட்டிங் பண்ணுறீங்களா? அப்ப அவங்கள நீங்க எப்ப மீட் பண்ணனும் தெரியுமா ?

முந்தைய காலத்தில் உங்கள் துணையை திருமணத்திற்கு முன்பு சந்திப்பது என்பது முடியாத காரியமாக இருக்கும். அவ்வளவு எளிதாக சந்திக்க ஜோடிகள் சந்திக்க முடியாது. ஆனால், தற்போது டேட்டிங் மூலம் நீங்கள் உங்கள் வருங்கால துணையுடன் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். இந்த நவீன காலத்தில் ஆன்லைன் டேட்டிங் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆன்லைன் மூலம் தங்கள் வருங்கால துணையை பெரும்பலானவர்கள் தேடுகிறார்கள். வீட்டில் உட்கார்ந்து, வசதியான ஆடைகளை அணிந்துகொண்டு ஒருவரைச் சந்திப்பதைவிட ஆன்லைன் டேட்டிங் வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

நீங்கள் ஒரு சாத்தியமான கூட்டாளரைச் சந்தித்து காதல் மின்னல் தாக்கியவுடன், ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்வீர்கள். நீங்கள் அவ்வப்போது அரட்டை அடித்து ஒருவரையொருவர் சிறந்த முறையில் அறிந்துகொள்ள முயற்சி செய்யலாம். இது மட்டுமின்றி, நீங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்த நபரை ஆன்லைனில் சந்திக்கவும் நினைக்கலாம். ஆனால், அவர்களை சந்திக்க இது சரியான நேரமா என்று நீங்கள் குழம்பும் நேரங்களும் இருக்கலாம். நீங்கள் குழப்பமான நிலையில் இருந்தால், உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம். அவரை/அவளைச் சந்திக்க இது சரியான நேரம் என்பதைச் சொல்லும் சில அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கொருவர் சந்திக்க ஆர்வமாக உள்ளீர்கள் உங்கள் ஆன்லைன் டேட்டிங் பார்ட்னரை சந்திக்கும் ஆர்வமும் உற்சாகமும், நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய அறிகுறியாகும். மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு பிடித்த நபர்களுடன் வீடியோ அழைப்புகள் மூலம் இணைகிறார்கள். அவர்கள் டேட்டிங்கையும் திட்டமிடுகிறார்கள். ஆனால் உங்களிடம் ஏற்கனவே போதுமான வீடியோ அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் விர்ச்சுவல் டேட்டிங் இருந்தால், அந்த நபரை நேரில் சந்திப்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். Recommended Video Shirtஐ இப்படியும் போடலாம்…. | Simply Stylish | Episode 3 உங்க கணவன் அல்லது மனைவியோடு வேற லெவலில் மகிழ்ச்சியா இருக்க இந்த 5 விஷயங்கள செய்ய மறந்துடாதீங்க! நீண்ட காலமாக ஒன்றாக இருந்தீர்கள் பெரும்பாலும் நீண்ட காலமாக நட்பில் மற்றும் உறவில் இருந்தும் இன்னும் சந்திக்காத தம்பதிகள், நேரில் சந்திப்பதை கருத்தில் கொள்கிறார்கள். முதல் முறையாக தங்கள் துணையை சந்திப்பதை அவர்கள் சங்கடமாக கருதுவதில்லை. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஆறுதல் நிலை மற்றும் உணர்ச்சி ரீதியான பிணைப்பு காரணமாக அவர்களை நேரில் சந்திக்க ஆர்வமாக இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இந்த விஷயங்கள் ஒத்ததாக இருந்தால், நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம்.

உங்க திருமண வாழ்க்கை எப்பவும் சண்டையாவும் மனஅழுத்தமாவும் இருக்கா?அப்ப இத பண்ணுங்க ஹேப்பி ஆகிடுவீங்க! ஒருவருக்கொருவர் பற்றி மிகவும் உறுதியாக உள்ளீர்கள் உங்கள் ஆத்ம துணையை நீங்கள் சந்தித்ததாக ஒரு தைரிய உணர்வு இருப்பதை விட வேறு என்ன அறிகுறி இருக்க முடியும்? ஆன்லைன் டேட்டிங் பற்றி மக்கள் அடிக்கடி சந்தேகம் கொள்கிறார்கள். ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மூலம் ஒருவர் உண்மையான துணையை கண்டுபிடிக்க முடியுமா? என்று அவர்கள் உணரலாம். ஆனால் சிறிது நேரம் செலவழித்த பிறகு, நீங்கள் ஆன்லைனில் சந்தித்த நபரைப் பற்றி நீங்கள் உறுதியாகவும் நமபிக்கையாகவும் இருந்தால், அவரைச் சந்திக்க வேண்டிய நேரம் இது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த 5 ராசிக்காரங்க மோசமான தீய குணம் கொண்டவர்களாம்...

இவங்க உங்க வாழ்க்கையையே அழிச்சிடுவாங்களாம்! நேரில் நேரத்தை செலவிட எதிர்நோக்குகிறீர்கள் நீங்களும் உங்கள் கூட்டாளியும் நேரில் நேரத்தைச் செலவிட பல திட்டங்களைச் செய்யலாம் என்பது வெளிப்படையானது. வரும் நாட்களில் நீங்கள் சந்திக்க வாய்ப்பில்லை என்றாலும், நீங்கள் அவருடன் சில மகிழ்ச்சியான தருணங்களை வாழ விரும்பலாம் அல்லது ஒன்றாக சுற்றுலா செல்லலாம். உங்கள் மனதில் இதுபோன்ற திட்டங்கள் மற்றும் எண்ணங்கள் நிறைந்திருந்தால், ஆம், நீங்கள் உங்கள் துணையை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறீர்கள்.

ஒன்றாக ஹேங்அவுட் செய்ய விரும்புகிறீர்கள் ஜோடியாக இருப்பதால், நீங்கள் டேட்டிங்கிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல. சில தம்பதிகள், ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதற்காக அடிக்கடி ஒன்றாக ஹேங்அவுட் செய்கிறீர்கள். பெரும்பாலான தம்பதிகள் லாங் டிரைவ் செல்வது, தெருக்களில் நடப்பது, ஒன்றாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்றவற்றை செய்வதை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். இந்த விஷயங்களை உங்கள் துணையுடன் செய்ய விரும்பினால், ஏன் காத்திருக்கிறீர்கள்? உடனே கிளம்பலாம். விஷயங்கள் எப்படி நடக்கின்றன? ஒரு உறவில் ஈடுபட்ட பிறகு, நல்ல மற்றும் அக்கறையுள்ள துணையைப் பெற்றதில் நீங்கள் மகிழ்ச்சியடையலாம். நீங்கள் அவருடன்/அவளுடன் அரட்டையடிப்பதையோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பேசுவதையோ விரும்பலாம். ஆனால், நீங்கள் நேரில் சந்திக்கும் போது விஷயங்கள் ஒரே மாதிரியாக நடக்குமா? என்று நீங்கள் யோசித்தால், நீங்கள் முயற்சி செய்யலாம். நீங்கள் நேரில் சந்திக்காத வரை, நீங்கள் ஆன்லைனில் சந்தித்தவர் நிஜத்தில் ஒருவரா என்பதை உங்களால் அறிய முடியாது.