"என்னை கல்யாணம் செஞ்சுக்க..இல்லைன்னா".. தோழியின் வீட்டில் ரகளை செய்த இளம்பெண்.. குழம்பிப்போன குடும்பத்தினர்.!

"என்னை கல்யாணம் செஞ்சுக்க..இல்லைன்னா".. தோழியின் வீட்டில் ரகளை செய்த இளம்பெண்.. குழம்பிப்போன குடும்பத்தினர்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தோழியின் வீட்டுக்கே சென்று தகராறில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

MP woman demands female friend to marry her arrested by police

 

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகௌர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் சோசியல் மீடியா மூலமாக அறிமுகம் ஆகியுள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர். இருவரும் தொடர்ந்து சாட் செய்து வந்ததாக தெரிகிறது. நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் தனது தோழியை சந்திக்க ராஜஸ்தான் சென்றிருக்கிறார்.

MP woman demands female friend to marry her arrested by police

நாகௌர் பகுதியில் இருந்த அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்ற அவருடைய தோழி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை கேட்டு இளம்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து மத்திய பிரதேச பெண், வாக்குவாதத்தில் ஈடுபடவே, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் இளம்பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் இவருக்கும் இடையிலான சாட் விபரங்களை வெளியிடுவேன் எனவும் தனக்கு 10 லட்ச ரூபாய் பணம் வேண்டும் எனவும் மத்திய பிரதேச பெண் மிரட்டியதாகவும் குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது.

MP woman demands female friend to marry her arrested by police

இதுபற்றி பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ராம்மூர்த்தி ஜோஷி,"21 முதல் 25 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் சந்தித்து நண்பர்களாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண், சனிக்கிழமை இரவு நாகூரில் உள்ள தனது தோழியின் வீட்டுக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். தனது தோழியை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி பணம் பறித்ததற்காக அவர்மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது" என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.