என்னப்பா REELS-ஆ.. எனக்கும் காட்டு.. பாகனிடம் அடம்பிடித்த யானை.. செம்ம கியூட்டான வீடியோ..!

என்னப்பா REELS-ஆ.. எனக்கும் காட்டு.. பாகனிடம் அடம்பிடித்த யானை.. செம்ம கியூட்டான வீடியோ..!

தகவல்தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் பலனாக தற்போது அனைவரிடத்திலுமே செல்போன் பயன்பாடு இருந்துவருகிறது. சுட்டிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வருகின்றனர். இது இப்படி என்றால் கும்பகோணத்தில் யானை ஒன்று தனது பாகனுடன் இணைந்து கியூட்டாக செல்போன் பார்க்கும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

Kumbakonam Temple Elephant watching mobile with Bagan video

பொதுவாக யானைகள் உருவத்தில் பெரியதாக இருந்தாலும் அதுவும் குழந்தை போலவே விளையாடக்கூடியவை. இதனாலேயே குழந்தைகளிடத்தில் யானை மீதான காதல் எப்போதுமே குறைவதில்லை. அந்த வகையில் கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற கும்பேசுவரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் மங்களம் யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது 56 வயதான இந்த மங்களம் யானை கடந்த 40 வருடங்களாக கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பார்த்துக்கொள்ள அசோக்குமார் எனும் பாகன் இருக்கிறார். இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோவில் மங்களம் யானை பாகன் அசோக் குமாருடன் போட்டிபோட்டுக்கொண்டு செல்போன் பார்க்கிறது.

மண்டபத்தில் அமர்ந்திருந்த அசோக்குமார் போனை உபயோகித்துக்கொண்டிருக்க, நின்றிருந்த மங்களம் யானை அங்கே என்ன தெரிகிறது? எனும் ஸ்டைலில் அவருடன் போட்டிபோட்டுக்கொண்டு போனை பார்க்கிறது. இந்த கியூட்டான சம்பவத்தை கோவிலுக்கு வந்திருந்த பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது.

Kumbakonam Temple Elephant watching mobile with Bagan video

முன்னதாக, மங்களம் யானையின் உடல் நலத்தை பராமரிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோவையை சேர்ந்த பக்தர் ஒருவர் இந்த நீச்சல் குளத்தை 8 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கி கொடுத்திருந்தார். அப்பகுதி மக்களின் அன்பை பெற்ற மங்களம் யானையின் இந்த செல்போன் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.