புதுமண தம்பதியர் உட்பட மூவர் பலியான சோகம்!

புதுமண தம்பதியர் உட்பட மூவர் பலியான சோகம்!

தேனி மாவட்டம் போடி அருகே, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும், உறவினரும் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

கனமழையால் பெரியாற்று கோம்பையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருமணமாகி ஒரு மாதமே ஆன ராஜா, காவியா தம்பதியர் உறவினர் வீட்டிற்கு விருந்துக்காக வந்தபோது ஆற்றில் குளிக்க ஆசைப்பட்டுள்ளனர்.

18 ஆம் படி நீர்வீழ்ச்சி அருகே ஆற்றில் இறங்கிய ராஜா தடுமாறி விழவே, அவரை கை கொடுத்து காப்பாற்ற முயன்ற காவியாவும், உறவினர் சஞ்சயும் சேர்ந்து ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாறை ஒன்றை இறுக்க பற்றியதால் தப்பித்த மற்றொரு உறவுக்கார சிறுவன் அளித்த தகவலின் பேரில் விரைந்த தீயணைப்புத்துறையினர் 3 பேரின் உடல்களையும் சடலங்களாக மீட்டனர்.