மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆண் நண்பர்: ஆணுறுப்பை வெட்டிய தாய்

மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆண் நண்பர்: ஆணுறுப்பை வெட்டிய தாய்

லிவின் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த ஆண் நண்பர் ஒருவர் தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து அந்த நண்பரின் ஆணுறுப்பை தாய் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் என்ற பகுதியில் 36 வயதுடைய பெண் தனது 14 வயது மகளுடன் 32 வயது ஆண் ஒருவருடன் லிவிங்டுகெதர் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் வேலை சம்பந்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில் அவருடைய ஆண் நண்பர் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்செயலாக வீடு திரும்பிய பெண் தனது மகளிடம் ஆண் நண்பர் தவறாக நடக்க முயற்சித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து ஆண் நண்பரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இதனால் அந்த ஆண் நண்பர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில் ’என் மகளிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபருடன் எனக்கு மோதல் ஏற்பட்டது. நான் உடனே கத்தியை எடுத்து அவருடைய ஆணுறுப்பை வெட்டி விட்டேன். இதுபோன்ற நபர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கவே இந்த காரியத்தை செய்தேன். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.